சண்முக. ஞானசம்பந்தன் முதுநிலை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் (பணி நிறைவு) மதுரை வானொலி;
தொல்காப்பியம்- பொருளதிகாரம், (1197) மெய்ப்பாட்டியல் “நகையே அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” என்று மனித உணர்ச்சிகளை எட்டாக வகுத்துச் சொல்கிறது. இந்த எட்டில் நகையும், உவகையும் இணைந்தால் அது சுவை பயக்கும் என்பதால் அது நகைச்சுவை எனக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் HUMOUR, SATTIRE, IRONY & SARCASM என வெவ்வேறு பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. SARCASM என்ற ஆங்கிலச் சொல்லை வஞ்சகப் புகழ்ச்சி என்று தமிழ்ப்படுத்தலாம். புறநானூற்றுப் பாடல்களில் அதியமானின் போர் தூதராக வந்த அவ்வையாரை தொண்டைமான் மன்னன் அவருடைய படைக்கொட்டிலுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தான். அவனுடைய ஆயுதச்சாலையில் உள்ள படைக்கலன்கள் எல்லாம் புத்தம் புதியதென பளபளவென இருந்தன. நீண்ட வேலும், ஈட்டியும், வளைந்த வில்லும், கூரான அம்பும் குவிந்து வைக்கப்பட்டிருந்தன. ;