முனைவர் தா. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் தேசிய நல்லாசிரியர், உடற்கல்வி இயக்குநர், அரசு மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோவில்;
சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பு (IAAF) ஜூலை 17, 1912 அன்று ஸ்டாக்ஹோமில் (ஸ்வீடன்) நிறுவப்பட்டது. இது தடகளம் மற்றும் தடகள விளையாட்டிற்கான உலக நிர்வாக அமைப்பாகும். இளைஞர்களிடையே தடகளத்தை ஊக்குவிக்கவும், புதிய தலைமுறையினருக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தைத் ஏற்படுத்தவும் 1996ஆம் ஆண்டில், சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பின் (IAAF) அப்போதைய தலைவர் ப்ரிமோ நெபியோலோ, உலகத் தடகள தினத்தை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 7ஆம் தேதி தடகளதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தடகளம் என்ற சொல் ரோமானிய வார்த்தையான அத்லான் என்பதில் இருந்து உருவானது. தடகள வீரர் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தைகளான அத்லோஸ் இருந்து தோன்றியது. இதன் கூட்டு பொருள் பரிசுக்காகப் போட்டியிடுபவர் மற்றும் போட்டி அல்லது பணி என்பதாகும். பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுகள் கி.மு.776இல் தோன்றின. ;