கவிஞர். பாரதன், எழுத்தாளர், கம்பம். ;
பணத்தை எங்கே தேடுவேன் என்று புலம்புகிறார்கள் பலர். பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்று குமுறுகிறார்கள் சிலர். யுகந்தோறும் இறைவன் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுத்து வருகிறான் என்பது இந்தியாவில் நிலவும் நம்பிக்கை. இது உண்மையோ, பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் நேர்மையையும், தர்மத்தையும் காக்கக் காலம் தோறும் மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உண்டாலம்ம இவ்வுலகம் என்று சங்கப்புலவன் இது போன்றவர்களை எண்ணித்தான் பாடியிருப்பான் போல. காஞ்சன முக்தி என்று கையால் கூடக் காசைத் தொடாமல் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க வள்ளலார் போன்ற மாமனிதர்களும் இந்த மண்ணில் வாழ்ந்ததையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. ஞானிகள் பண ஆசை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாதாரண மனிதர்கள்? இந்தக் கேள்விக்கு விடை தருகிறது. கேரள மாநிலத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.;