டாக்டர் ராதா ருக்மணி மகப்பேறு மருத்துவர் சக்தி மருத்துவமனை, மதுரை;
குழந்தை பிறந்தவுடன் பெண்ணுக்கு ஏற்படும் இயற்கையான பிரச்சனைகள் என்னென்ன? பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் இரத்தக்கசிவு, மார்பக வீக்கம், சிறுநீர் கிருமித் தொற்று. இதற்கான தீர்வுகள் என்ன? வெள்ளைபடுதல், இரத்தக்கசிவு, மார்பகவீக்கம் ஆகிய மூன்று விளைவுகளும், தாய் இரத்தத்தின் வாயிலாக, குழந்தைக்கு பெறப்பட்ட ஹார்மோன்களின் செயல்பாடுகள் மூலம் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில நாட்களிலேயே ஹார்மோன்களின் அளவுகள் குறைய குறைய, இவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பெண்களின் மலவாயும், சிறுநீர் வாயும் மிக அருகில் இருப்பதால், மலம் சிறுநீர் வாய்க்குள் புகுவதால் கிருமித் தொற்று ஏற்படுகிறது. எனவே மலம் சுத்தம் செய்யும் பொழுது சிறுநீர் வாய்க்குள் மலம் புகாமல் பாரத்துக் கொள்ள வேண்டும். கிறுமித்தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். ;