டாக்டா் பி.எஸ்.சண்முகம், முடநீக்கியல்துறை பேராசிாியா், அரசு மருத்துவா் (பணிநிறைவு);
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். என்பதனை நன்குணர்ந்தவர்கள் நாம். நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் என்று வேண்டினார் வள்ளலார். வள்ளுவரின் நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்ற குறள்கூட நோயாளிகளைப் பாதுகாக்கும் விதமாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறளாகவே நாம் கருதவேண்டும்.;