பொறியாளர் தேமொழிச்செல்வி ஆசிரியர்குழு உறுப்பினர், துளிர் அறிவியல் மாத இதழ் ;
மகளிர் தினத்தன்று வந்து குவியும் வாழ்த்துகளைப் பார்த்திருப்பீர்கள். அவை பெரும்பாலும் தாயாக, தமக்கையாக, மனைவியாக, மகளாக அன்பு செய்யும் பெண்ணுக்கு நன்றி சொல்லும் செய்திகளாகவே இருக்கும். அல்லது அவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்வதைப் பாராட்டுவதாக இருக்கும். அறிவியலில், விளையாட்டில், அரசியலில், இலக்கியத்தில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகள் தேடினாலும் கிடைக்காது. ;