மருத்துவர். வெ. சுந்தர மகாலிங்கம், போகர் அக்குபங்சர் மற்றும் மாற்றுமுறை மருத்துவ ஆராய்ச்சி மையம், விருதுநகர்.;
பலவித நோய்களுக்கும், விஷங்களுக்கும் கசப்புச் சுவையே மருந்தாகிறது. கசப்பைச் சிறிது சிறிதாக உண்டு பழகி, உடலில் கசப்பு தேவையான அளவு இருக்கும்படி செய்து கொண்டவர்கள் பாம்பு கடித்தாலும் இறப்பதில்லை. உடல் நலத்துக்காகக் கசப்பை பழகுகிறவர்கள், தம் உடலில் கசப்புக் குறைவாய் இருக்கிறதா என்று தெரிந்துகொண்டுதான் சாப்பிட வேண்டும். போதிய அளவு கசப்புச் சேர்ந்ததும் கசப்பு உண்பதை நிறுத்தவும் தெரிய வேண்டும். கசப்புச் சுவை உடலில் குறையும்போது சீரணம் கெட்டு, ஐம்பொறிகளும் தத்தம் செயல்களைச் செய்ய இயலாது போகின்றது. நரம்பின் பலத்தினால்தான் உடல் இயங்குகிறது. எனினும் கசப்புச் சுவையே நரம்பிற்கு பலத்தைத் தருகிறது. உடலை இயக்குவதும், இந்திரியங்களை இயக்குவதும், மூளையை இயக்குவதும் நரம்புகள் தான். Read More...;