சி. சுமதி, செவிலியர், சுகம் மருத்துவமனை, மதுரை ;
எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள்தான். எனக்கு மருத்துவம் சார்ந்த படிப்புப் படிக்கவேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே ஆசை. அதற்குப் பல காரணங்கள் அதன் விளைவாகத்தான் செவிலியர் படிப்புப் படித்தேன். இன்றைக்கு என் வாழ்க்கையே அதுதான். செவிலியர் பணி என்பது குழந்தைப் பராமரிப்பு, சிக்கலான மருத்துவப் பராமரிப்பு, மனநல மருத்துவம் அல்லது பொதுச் சுகாதாரம் எனப் பன்முகத்தன்மை கொண்டது. மேலும், இரக்கம் மற்றும் பச்சாதாபமே செவிலியர் பணிக்கு அடிப்படை.;