எஸ். பாலசுந்தரம் குழந்தைகளுக்கான பிசியோதெரபிஸ்ட், சென்னை;
மனித இனம் மருத்துண்ணும் வழக்கத்துக்கு உட்படுத்திக்கொண்ட பின்னர் மருந்து மற்றும் மருத்துவத்தின் அருமை நமக்கு இன்றியமையாததாக மாறியது. ஆதியில் மருத்துவரும் மருந்தும் நம் வாழ்வியலினூடே கலந்திருந்தது. பிறகு நாம் நாகரீகம் மற்றும் நவீனத்தை நோக்கி முன்னேற நம் அறியும், தேவையும், பெருகின. அறிவியல் சாதனங்கள் வளர்த்தது போல் வியாதிகளும், சொகுசான வாழ்வியல் முறைகளும் அதிகரித்துள்ளன. அதேபோல் நெருக்கடிகளும் விபத்துகளும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உலகப்போர்களும், இயற்கை சீற்றங்களும் மருத்துவத்துறையின் மகத்தான வளர்ச்சிக்கு அடிகோலின. தேவைகளும், நோய்களும், அதிகரித்தபோது மருத்துவதுறையின் கிளைகளும் நீண்டன. அதன் ஒரு பிரிவுதான் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி). அதுகுறித்துச் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம்.;