கே.பி. பாரதி வளர்ச்சிக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை ;
எத்தனையோ கடவுளர்கள் பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சவுணர் சாமியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் உள்ள பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்கக் கிராமம் குப்பல்நத்தம். இவ்வூரைச் சுற்றி மொச்சிக்குளம், கரிசல்குளம் முதலிய பழமையான பாசனக் கண்மாய்கள் உள்ளன. இவ்வூர் பகுதியில் கவுண்டல் நதி பாய்கிறது. உசிலம்பட்டியிலிருந்து பேரையூர் செல்லும் பண்டைய பெருவழிப் பாதையில் உள்ள குப்பல்நத்தம் பகுதியில் சமண சமயத்தவர் வாழ்ந்துள்ளனர். குப்பல்நத்தத்திற்கு மேற்கே கே.ஆண்டிபட்டிக்கு அருகில் பொய்கைமலை உள்ளது. இதன் மேற்புறம் சற்று உயரமான இடத்தில் சமண முனிவர்கள் வாழ்ந்த சமணப்பள்ளி ஒன்று இருந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சமண சமயத்தவர்களுக்குரிய இப்பள்ளி வழிபாட்டுத் தலமாகவும் முனிவர்களின் வாழ்விடமாகவும் இருந்துள்ளது. சவுணர் சாமியைத் தேடுகிறீர்களா..? ;