கே.பி.பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா அலுவலா்;
ஐயனார் வழிபாடு கிராமப்புறத் தமிழ் மக்களிடையே பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வம் ஆக இவரை வழிபடுகின்றனர். தமிழகத்தில் கிராமம் தோறும் ஐயனார் மரபு மற்றும் கலாச்சாரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் இன்றும் காண்கிறோம். ஐயனார் கோவில் வளாகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் சாதி வேறுபாடு இன்றி, ஒன்றுகூடி திருவிழா நடத்துவது நமது தமிழகத்தின் வழக்கமாக உள்ளது.;