கடலளவு வரலாறு சொல்லும் கடலூா்

கடலளவு வரலாறு சொல்லும் கடலூா்

கே.பி.பாரதி வளா்ச்சிக்கான சுற்றுலா ஆா்வலா் தானம் அறக்கட்டளை;

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமையும், தொன்மைத் தனித்துவ மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டம் 1993ஆம் ஆண்டுத் தென்ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. கடற்கரை நிறைந்த கடலூர் மாவட்டத்தின் கிழக்கே வங்காள விரிகுடா கடலும், தென்கிழக்கே பாண்டிச்சேரியும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், மேற்கே பெரம்பலூர் மாவட்டமும் எல்லைகளாகத் திகழ்கின்றன. கடலூர் துறைமுகம் பண்டைய காலத்திலிருந்து பல்வேறு நாடுகளில் வணிகத்தொடர்புடன் சிறந்து விளங்கியது. தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, கடலூரின் வேளாண்மை வளமையைப் பெருக்குகின்றன. கடலூர் மாவட்டத்தில் நீண்ட கடற்கரை உள்ளதால் இயற்கை இடர்படுகள் அதிகம் விளையும் மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.;

Read More ...

Related Post