பேராசிரியர் முனைவர் உ.அனார்கலி ;
பள்ளிநூலகங்களில் தரமான நூல்களை இடம்பெறச் செய்வதோடு, வாசிக்கும் முறை நூல்களைக் கையாளும் விதம் ஆகியவை குறித்துக் கற்றுத் தருவது அவசியம். கற்றல்திறனில் குறைபாடுடைய மாணவர்கள், இடைநிற்றல் மாணவர்கள், உடல், மனம் நலிவுற்றோர் ஆகியோர்களைக் கண்டறிந்து, அவர்களின் மனதுக்கு நெருக்கமாய் இடம்பிடித்து, பின் அவர்கள் மனம் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கும் பணியை, பணி நேரத்திற்குப் பின் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் "வார்டுமுறை"யை கடைப்பிடிக்கலாம். சாதியம், மதம் ஆகியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் செயற்கை அடையாளங்களைக் களையக் கண்டிப்புக் காட்டப்பட வேண்டும். ;