ப.திருமலை ஆசிரியர், பட்டறிவுப்பதிப்பகம்;
நம்மில் பலர், வேலைக்குச் சென்று சம்பாதிப்பதே சாப்பிடுவதற்காகவும், குடும்பத்தினரின் பசியாற்றுவதற்கும்தான். ஆனால், இன்றைக்கு ஏறிவரும் விலைவாசி அதனைக் கேள்விக்குறியாக்கியாக்கிவிடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது. இந்தாண்டு (2024) அக்டோபர் மாதத்துடன் கடந்தாண்டு (2023) அக்டோபர் மாதத்தினை ஒப்பிடுகையில், இந்தாண்டு அக்டோபரில் உணவுப் பொருள்களின் விலை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அதேநேரத்தில், ஒருவரின் சராசரி சம்பளம் 10 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாம். ;