ஆடிட்டர் கலாவதி ஜெய்;
தமிழக ஊடக ஆளுமைகளில் ஒருவரான ஏ. ராமகிருஷ்ணன் 1941ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தனது இரண்டு வயதில் போலியோவால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் போனது. இவருடைய தந்தை வக்கீலாக இருந்து நீதிபதியாக உயர்ந்தவர். அம்மாவுக்கு இவர் மீதும் அன்பும் அக்கறையும் அதிகம். இருந்தாலும் இவர் தன்னுடைய தாத்தாவின் அன்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்தவர். இவருக்கு எல்லோர் படிக்கும் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. தனியாக அமைக்கப்பட்ட பள்ளியில் படித்தார். ;