ஆடிட்டர் கலாவதி ஜெய் ;
மானசி ஜோசி 1989ஆம் ஆண்டு இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிறந்தவர். இவரது தந்தை மும்பையில் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர். சிறு வயது முதல் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மானசி ஜோசி. இறகுப்பந்து விளையாட்டினை இவர் தனது ஆறு வயது முதல் தன் தந்தையுடன் விளையாட ஆரம்பித்தார். தந்தையும் மகளும் களத்தில் கலக்கினர். மானசி ஜோசி தன் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். தனது வெற்றியின் மூலம் பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்தார். பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த இவரைப் பல்வேறு நிறுவனங்கள் இவரது விளையாட்டுத் திறனைக் கருத்தில் கொண்டு வேலைக்கான ஆர்டருடன் அணுகின. மும்பையில் நல்ல நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். விளையாட்டினைத் தொடர்ந்தார். ;