ஆடிட்டர் கலாவதி ஜெய்;
அக்பர் கான் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி இராஜஸ்தான் மாநிலத்தில் பங்காசர் என்ற கிராமத்தில் விவசாயியான கீஸ்தூர்கான் - ரஹ்மாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அந்த கிராமத்தில் அப்போது ஐம்பது வீடுகளே இருந்தன. மக்கள் தொகையும் ஐநூறுக்கு உட்பட்டதாகத்தான் இருந்தது. எந்த அடிப்படைவசதியும் இந்த கிராமத்தில் இல்லை என்பதோடு நாற்பது கி.மீட்டர் சுற்றுவட்டாரத்தில் கூட எந்த வசதியும் இல்லை. பிறக்கும் போதே அக்பர்கானுக்கு இரு கண்களிலும் பார்வை இல்லை. இவருடைய அண்ணன் முகமது உசேனுக்கும் பார்வை குறைபாடு இருந்தது. அக்பர்கானுக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை மிகுந்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பும் இல்லை. வசதியும் இல்லை.;