ஆடிட்டா் கலாவதி ஜெய்;
சென்னையில் பிறந்தவர் சுல்தான் ரேஃபய். பிறவியிலே முதுகெலும்பு தண்டுவடத்தில் பிரச்சனையுடன் பிறந்தவர். மருத்துவர்கள் இந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று கூறி இந்தக் குழந்தை கண்ணாடிக் குழந்தை போன்றது பத்திரமாக வைத்துப் பாதுகாக்கலாம் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர். பெற்றோர் மிகுந்த வருத்தத்துடன் அந்தக் குழந்தையை மருத்துவமனையிலிருது வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். எப்படியும் அந்தக் குழந்தையை வளர்த்தே தீருவது எனத் தீர்மானித்தார்கள். குழந்தைக்கு அதிகமாக அவர்கள் ஊட்டியது தன்னம்பிக்கையைத்தான். என்றாலும் குழந்தை தொடர்ந்து உயிர்வாழ்வதில் சிக்கல்களைச் சந்தித்தே வந்தது. மருத்துவனையும் வீடுமாக இருந்தார்கள். இந்தச் சூழலில் குழந்தைக்கு முதுகுத் தண்டில் ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்றார்கள் டாக்டர்கள்.;