ஆடிட்டர் கலாவதி ஜெய்;
மாலதி கர்நாடகா மாநிலத்தில் கோடாவில் ஜூலை 6, 1958 பிறந்தவர். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, சிறிய உணவு விடுதியை நடத்திவந்தார். தாய் பத்மாவதி, மிகவும் ஏழ்மையான குடும்பம் இவருடன் சேர்ந்து நான்கு (4) குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்தில் இவர் போலியாவால் பாதிக்கப்பட்டார். 3 வயதில், அவர் சென்னையில் உள்ள ஒரு எலும்பியல் மையத்தில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் அடுத்த 15 ஆண்டுகள் கழித்தார். தனது வாழ்நாள் முழுவதும் உடைந்த கால் எலும்புகளை சரிசெய்ய 30க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார் பின்பு ஓரளவு எழுந்து உட்கார்ந்து சக்கர நாற்காலியில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். மாலதியின் மிகப்பெரிய ஆதரவு அவளுடைய தந்தைதான். மாலதியின் மீதான நிலையான ஆதரவும் நம்பிக்கையளித்தலும் மாலதியின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.;