நிக்கோலஸ் பிரான்ஸிஸ் எழுத்தாளர் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சியாளர்.;
கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் சேமித்த பணத்தில் புதிய கார் வாங்கி, வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்ட சாலையில், பிடித்தமான நேரத்தில் ஓட்ட உங்களுக்கு ஆசை இருக்கிறதா? அதெல்லாம் கனவாகப் போகும் காலம் அருகாமையிலேயே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட எண் (ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை) வாகனங்கள் மட்டும் தான் குறிப்பிட்ட தினத்தன்று சாலையில் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கும் நடைமுறை பல நகரங்கில் செயல்பாட்டிற்கு வந்தாகிவிட்டது. எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் இது நடைமுறைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதற்குக் காரணம் காற்று மாசு. சமூகப் பொறுப்பு இல்லாமல், நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி தினம் தோறும் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி வாழும் இன்றைய நிலை, எதிர்காலம் குறித்தக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.;