பேராசிாியா் முனைவா் கே.சதாசிவம் சுற்றுச்சூழல் பொருளாதாரத்துறை மதுரை காமராசா் பல்கலைக்கழகம்;
பாலைவனமாதல் என்பது, வறண்ட, ஓரளவு வறண்ட அல்லது ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. உயிாியற் பல்வகைமை இழக்கப்படுதலும், உற்பத்தித் திறன் இழப்பும் பாலைவனமாதலின் முக்கியத் தாக்கங்களில் ஒன்றாகும். பாலைவனமாக்கம் என்பது ”மறைமுகமான ஒரு சூழலியல் கொள்ளை நோய்” என அழைக்கப்படுகிறது. இன்றைக்குப் பாலைவனமாக்கலின் தாக்கங்கள் உலகெங்கிலும் உள்ள சமூகங்களால் தீவிரமாக உணரப்படுகின்றன. ;