வீ. வெங்கடேசன், வெளியீட்டாளர், நமது மண்வாசம் ;
சுமார் நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகப் பூமி பிறந்ததாக அறியப்படுகிறது. பூமி தவிர வேறேன்னன்ன கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியும் என்று தொடர்ந்து மனிதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறான். அனைத்து ஆராய்ச்சிகளின் இறுதியிலும், அனைத்து உயிரினங்களும் தடையின்றி வாழ உகந்த ஒரே கிரகம் பூமி மட்டும் தான் என்ற பதிலே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. பூமியின் கட்டமைப்பு என்பது மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய வகையில் மிகச் சிரத்தையுடன் இயற்கை வரமாய் உருவானதாகும். எந்தெந்த உயிரினம் எங்கெங்கே வாழுதல் நலம் என்று தானாகவே பூமி ஏற்படுத்திய வரைமுறைதான். மனிதன் நாட்டிலும், விலங்குகள் காட்டிலும் வாழும்படியாகக் காலப்போக்கில் மாற்றியது எனலாம். ;