வீ. வெங்கடேசன் வெளியீட்டாளா், நமது மண்வாசம்;
பூமியின் மேற்பரப்பனாது சுமார் 71 சதவிகித நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தாலும், இதில் 2.5 சதவிகிதம் மட்டுமே நன்னீர் உள்ளது, இதில் பெரும்பாலான அளவு பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளாய் பயனற்று உள்ளது. உலக அளவில் உள்ள நன்னீரில் சுமார் 1 சதவிகிதத்து க்கும் குறைவான அளவு மட்டுமே மனித பயன்பாட்டிற்கு எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது. உலகச் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 2 பில்லியன் மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடிக்கிறார்கள், இதன் காரணமாக வயிற்றுப்போக்கு நோய்களால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 485,000 இறப்புகள் ஏற்படுகின்றன. உலகளாவிய நீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவிகிதம் விவசாயத்திற்கெனச் செலவிடப்படுகிறது. அதே சமயத்தில், விவசாயத்தில் திறமையான நீர் மேலாண்மை என்பது உணவுப் பாதுகாப்பின் முக்கிய அம்சமாக உலகளவில் கருதப்படுகிறது.;