வீ.வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம் ;
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இடையிலான பல்வேறு உறவுகளைக் கண்டறிவது, அதன் பரிமாணங்களை அடையாளம் காண்பது மற்றும் முறையாகப் புரிந்துகொள்வது என்பது அறிவியலின் மிகப்பெரிய சவால்களில் சில எனக் கூறலாம். உதாரணமாக சுவிட்சர்லாண்ட் நாட்டைச் சார்ந்த இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேசன் ஆப் நேச்சர் என்ற அமைப்பானது, இப்பூமியில் தாவரங்கள், விலங்குகள், மற்ற பிற உயிர்கள் உள்ளிட்ட சுமார் 87 லட்சம் இனங்கள் உள்ளதாகவும், அதில் சுமார் 12 இலட்சம் இனங்கள் மட்டுமே அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்துள்ளது.;