வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம் ;
உலகம் அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் மின்னணுச் சாதனங்களின் பெருக்கம் நமது அன்றாடவாழ்வின் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கணினிகள், குளிர்சாதனப்பெட்டிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்கள் கடைக்கோடியில் உள்ள கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை எங்கும் வியாபித்துள்ளன. மின்னணுச் சாதனங்களின் பயன்பாடு நமது அன்றாடவாழ்வில் அத்தியாவசியமானதாக இருந்தபோதிலும், அவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக உள்ளன.. எப்படி ? ;