சி. பாபு மீன்வள விஞ்ஞானி, இந்திய மீன்வள அளவைத் தளம் ;
இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி, தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மும்பையிலிருந்து லண்டனுக்கு இந்தியாவிற்குச் சொந்தமான முதல் கப்பலான எஸ்.எஸ் லாயல்டியின் முதல் பயணத்தை நினைவுகூரும் விதமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, கடல்சார் வர்த்தகத்தில் ஒரு முக்கியப் பங்களிப்பாளராக இந்தியா இருந்து வருகிறது, மேலும் கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் இந்நாளில் பேசப்படுகிறது.;