வீ.வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;
சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சீன நாட்டில் நடந்த சம்பவம் அது. அப்பொழுது சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அங்கு அதிகமாக இருந்தது. அவைகள் தானியங்கள் மற்றும் விதைகளை உண்பதால் விவசாயத்திற்கு ஒரு தொந்தரவாகக் கருதப்பட்டது. அவற்றை முழுவதுமாக அழிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. சில மாதங்களிலேயே லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் கொல்லப்பட்டன. அவற்றின் அழிவால் அரசும் பெருமூச்சு விட்டது. ஆனால் திடீரெனச் சீனாவில் பஞ்சம் தலைவிரித்தாடியது.;