வீ.வெங்கடேசன் வெளியீட்டடாளா், நமது மண்வாசம்;
நாம் நீல கிரகத்தில் வாழ்கிறோம். அது என்ன நீல கிரகம் என்கிறீர்களா பூமியின் மேற்பரப்பில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதியில் கடல் வியாபித்திருக்கிறது. பருவநிலையைச் சமன்படுத்துவது, பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுப்பது, நெய்தல் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்பது உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் கடலின் பங்கு வியாபித்துள்ளது. இது சூரிய கதிர்வீச்சின் கணிசமான பகுதியை உறிஞ்சி, காலநிலை அமைப்பில் சமநிலையைப் பராமரிக்கிறது. மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடில் சுமார் 25 சதவிகிதம் கடலால் உறிஞ்சப்பட்டுப் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறைக்கப்படுகிறது. ;