அருள்நிதி பகவதி மோதிலால், எழுத்தாளர் ;
தட..தட..தட..தட என புலியிடம் சிக்கிவிடக்கூடாது என உயிருக்காக ஓடும் மான் போல வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது அந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயில். மும்பையிலிருந்து குடும்பத்துடன் இரயிலில் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த வள்ளி சென்னையில் கணவர் வாங்கித் தந்த பத்திரிகைகளைப் புரட்டிக்கொண்டிருந்தாள். ராணுவ வீரர்களின் குடும்பத்தினை இந்த தேசம் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறது என சுதந்திரதினத்தையொட்டி மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருந்த செய்தியைப் பார்த்தவுடன் ஏனோ வள்ளியின் நினைவுகள் நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஓடியது. ;