வழக்கறிஞர் திருநாவுக்கரசு;
காலை மணி ஐந்து. ஊரிலிருந்து கிளம்பி, சென்னை எழும்பூர் இரயில் நிலையம் வந்தடைந்தான் விவேக். முழுப்பெயர் விவேகானந்தன். அப்பா தீவிர விவேகானந்தர் பக்தர். அதனால் மகனுக்கு அந்தப் பெயரைச் சூட்டியிருந்தார். அவனும் அனைவரையும் அன்புடனும் சமமாகவும் நேசித்தான். அப்பா விவசாயி. மகனுக்கு ஒழுக்கத்தோடு கல்வியையும் தந்திருந்தார். ஒரு டிகிரி முடித்திருந்தான். வேலைத் தேடிக்கொண்டிருக்கிறான். அத்தோடு அவனுக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு. ஒரு கட்சியின் பொறுப்பிலும் இருக்கிறான். ஒக்கி புயல் நேரத்தில் இவன் தனது பகுதிக்கு ஆற்றிய பணி அவனுக்கு நல்ல பெயரை சம்பாதித்துத் தந்திருந்தது. அதனால் அந்த அரசியல்கட்சி இவனை தங்களுக்குள் இழுத்துப் போட்டிருந்தது. இப்போது இவனின் சென்னை வருகை அவன் சார்ந்த கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்காகத்தான். அரசியலில் இருந்துகொண்டுதான் மக்கள் சேவை செய்யவேண்டுமென்றில்லை. உனக்கு அரசியல் வேண்டாம் என அப்பா சொன்னதை அவன் ஏற்கவில்லை.;