அருள்நிதி பகவதி மோதிலால்;
கணவர் ரவிக்கு டிபன் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது மொபைல் சிணுங்க அதை எடுத்தார் சுஜா. பார்வதியா? எப்படி இருக்கிறாய்? உன் அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை என்று சொன்னாயே. எப்படியிருக்கிறார்..? நேற்றைக்கு அவர் இறந்துட்டாரு. என்ன சொல்ற.. ஆமா.. யாரிட்டேயும் சொல்ல முடியல்ல. நான் ஒத்த ஒருத்தியாய் நின்றுதான் எல்லாம் பார்க்கவேண்டியதாயிற்று. நேற்று சாயந்திரம் தகனமும் செய்தாச்சு. இன்றைக்கு காலையில மற்ற காரியங்களெல்லாம் முடிஞ்சுது. நீ ஏற்கெனவே கூப்பிட்டிருக்க. பார்த்தேன். அதுதான் பேசலாம்னு.. சாரி.. பார்வதி. நாளைக்கு நானும் அவரும் வாரோம்.. சொல்லிவிட்டு பார்வதியைப் பற்றிய நினைவில் மூழ்கினாள் சுஜா. .;