முனைவர் சி. அனிதா பேராசிரியர், சவீதா ஸ்கூல் ஆஃப் இஞ்ஜினியரிங், சென்னை ;
கூவம், கொற்றலை, அடையாறு, போன்ற ஆறுகள், ஓட்டேரி, விருகம்பாக்கம், மாம்பலம்..என நீர்வழித் தடங்கள் கொண்ட சென்னையில் நூற்றுக்கணக்கான ஏரிகள், குளங்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை நகரமயமாக்கல், விரிவாக்கம் என்ற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், அரசுக் கட்டுமானங்கள், மார்க்கெட்டுகள் அவற்றில் எழுந்துள்ளன. இதனால் மழை நீர் முறையாகச் செல்ல வழியில்லாமல் தண்ணீர் தேங்கி, வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியிருப்பதைக் காணமுடிகிறது. அதுவும் அண்மையில் மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப்போட்டுவிட்டது. ஒவ்வொரு பெரும் மழை அல்லது புயலின்போதும் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான். ஏன்? ;