திரு. ப. திருமலை, நமது மண்வாசம் ஆசிரியர் ;
என்ன நைநா மேஜை மீது இலைகள் பரப்பி வைச்சிருக்கீங்க.. கேட்டவாறே வந்தார் மைனா. இது முள்ளங்கி இலை. இதுல புரதம், சோடியம், இரும்பு, மெக்னீசியம், கார்போஹைட்ரேட், குளோரின் போன்ற ஊட்டச்சத்துக்களுடன், இது வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் மூலமாகும், இதை உட்கொள்வதன் மூலம், இதய நோய்களும் குணப்படுத்தலாம். உடலின் இரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்க, முள்ளங்கி இலைகளைச் சாப்பிடலாம். இதனால், சொறி, அரிப்பு, பருக்கள் போன்ற தோல் நோய்கள் வராது. ;