எம்.வசந்த், பி.ஜனா அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்;
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. வார்டு மறுவரையறை, மாவட்ட எல்லை பிரிவு விவகாரம் போன்ற காரணங்களால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அப்போது தேர்தல் நடைபெறவில்லை. இம்மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இது தவிரத் தமிழகம் முழுவதும் விடுபட்ட நகர்புற உள்ளாட்சிகளுக்கு 2022ஆம் ஆண்டுத் தேர்தல் நடத்தப்பட்டது.;