பேராசிரியர் முனைவர் வி. சாம்பசிவன், துணைமுதல்வர் (ஓய்வு), மதுரைக் கல்லூரி ;
மக்கள் தொகை என்பது, ஒரு நாட்டில்(அ) பகுதியில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் எண்ணிக்கையாகும். பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன. தற்போது உலக மக்கள்தொகை 8,00 கோடியைக் கடந்துவிட்டது. உலகில் ஒவ்வொரு நொடியும் 4.3 பிறப்புகளும் 2 இறப்புகளும் நிகழ்கின்றன. பூமியில் மக்கள் தொகை அனைத்து இடங்களிலும் சமமாக வாழ்கிறார்கள் எனக் கூறமுடியாது. ;