நமது கடமை என்ன? எப்போது?

நமது கடமை என்ன? எப்போது?

சண்முக. ஞானசம்பந்தன், மதுரை வானொலி - பணி நிறைவு) ;

மனம் கொண்டவன் தான் மனிதன். மனம் மட்டுமே மனிதனை பிற உயிரினங்களிடமிருந்து அதிலும் குறிப்பாக பிற பாலூட்டிகளிடமிருந்து இன்னும் குறிப்பாகக் குரங்கிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆனால், இந்த மனம் மனிதனுக்கு வரமா? அல்லது சாபமா? என்பது ஒரு பெருங் கேள்விக் குறி தான். ஒரு புறம் மனித மனம் இல்லாவிட்டால் பற்றும் பாசமும் படர்ந்து குடும்பம் என்னும் அமைப்பே உருவாகியிருக்காது என்கிறார் ஃப்ரடெரிக் எங்கெல்ஸ். ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பின் மூலம் செல்வ வளமும் பெருகியிருக்காது. செலவாணியும் பண்டமாற்றும் தொடங்கியிருக்காது. முதற் கட்டத்தில் அமைதியும் புரிதலும் தேவைப்படுவது தனி மனிதனுக்குத் தான். காலமும் இடமும் மாற மாற பொருளாதாரச் சூழல் மாற மாற மனித குணமும் மாறும். எதிர்காலத்தைக் குறித்து இடைவிடாமல் எச்சரித்துத் தொண தொணக்கும் பெற்றோர்களைக் கண்டாலே வெறுப்பும் வன்மமும் குழந்தைகளுக்குத் தோன்றுகின்றன. சாதி, மதம், இனம், மொழி, தேசம் என வெறியூட்டும் பொய்மை உறவுகளை வாட்ஸ் ஆப்பிலும் முக நூலிலும் கட்டி அழும் வன்மப் பகிர்வுகள்தான் இன்று ஏராளம். Read More ;

Read More ...

Related Post