பேராசிரியர், முனைவர் அழகப்பன், பதிவாளர், (பணிநிறைவு) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்;
கடினமான ஒன்றிலிருந்து விடுபடுதலைச் சுதந்திரம் என்கிறோம். “இரண்டும் இரண்டு நான்கு என்று சொல்வதற்கான வாய்ப்பு, உரிமை வழங்கப்பட்டால் அது சுதந்திரம்" என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். தடையின்றிச் செயல்பட, பேச அல்லது நினைக்கும் உரிமை சுதந்திரம். சுதந்திரமானது தனிநபர் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும், தனது விருப்பங்களைப் பகுத்தறிவுடன் எடைபோடுவதற்கும் அத்துடன் தமது செயல்களுக்குப் பொறுப்பேற்கும் தன்மையையும் உள்ளடக்கியது. சுதந்திரம் என்பது தனிநபர்கள் திறனை விரிவுபடுத்த அனுமதிக்கும் ஒரு சூழல் எனலாம். தனி நபர் சுதந்திரத்திற்கும் தேசத்திற்கான சுதந்திரத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது. தனிநபர் சுதந்திரமாக இருந்தால்தான் தேசமும் சுதந்திரமிக்கதாக இருக்கும்.;