வழக்கறிஞா் கணேசன் சமூக செயல்பாட்டாளா்;
உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்தியே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, முதலாளித்துவ ஆட்சி, கம்யூனிச ஆட்சி, மக்களாட்சி போன்ற ஆட்சிமுறைகளே நடைமுறையில் இருக்கின்றன. நம்முடைய அரசமைப்புச் சட்டம் சனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மக்களாட்சி முறையில் ஆட்சி செய்கிற மிகப்பெரிய சனநாயகநாடாக நம் நாடு இருப்பதை எண்ணி நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், இன்றைய சூழலில் இவ்வாறு பெருமிதம் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது.;