என். அண்ணாமலை, வாசிப்போர் இயக்கம், நாகர்கோவில் ;
போரில் குழந்தைகள் அனாதைகளாகும் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகரமான நிலைமைகளை நிவர்த்தி செய்யவும் ஜனவரி 6ஆம் தேதி உலகப் போர் அனாதைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானோர் மீதமுள்ள பெற்றோர், தாத்தா பாட்டி அல்லது வேறு ஏதோ ஒரு குடும்ப உறுப்பினருடனும் வாழ்கின்றனர். இதில் 95 சதவிகிதம் பேர் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆய்வுக்கு உள்ளான ஒரு மாணவர்கள் குழு, எங்களுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது. அது எங்களுக்கு ஏதேனும் நம்பிக்கையைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் சந்தித்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது எங்களை எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கச் செய்கிறது என்று பதிவு செய்திருந்தனர். காசா குழந்தைகள் மட்டுமல்ல, போரினால் பாதிக்கப்பட்ட எல்லாக் குழந்தைகளின் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கிறது? போரும் அதனால் குழந்தைகள் எதிர்கொள்ளும் அவல நிலை குறித்தும் அலசல்.. ;