முனைவர் பி. சசிக்குமார் விஞ்ஞானி, இஸ்ரோ, திருவனந்தபுரம்;
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியை ஆண்டு வந்த ஹிட்லர் இந்த உலகை தன் குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஆவலால் இரண்டாம் உலகப்போரை தொடங்கினார். உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரிந்து பல்வேறு கட்ட போர்களில் ஈடுபட்டனர். செப்டம்பர் 1939 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 1945 ஆம் ஆண்டு வரை ஆறாண்டு காலம் இந்த இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. 8 கோடி மக்கள் இந்தப் போரினால் மாண்டு போயினர். அதில் பெரும்பாலானவர்கள் போரில் ஈடுபடாத வெகுஜன மக்கள் தான்.;