வள்ளி ரமேஷ், சமூகச் செயற்பாட்டாளர் ;
ஒரு நபரின் ஆளுமை மற்றும் குணாதிசயங்கள் குடும்பத்தால் உருவாக்கப்படுகின்றன. உறவுகளின் அர்த்தத்தைக் குடும்பம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது வெளி உலகத்துடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க உதவுகிறது. குடும்பத்திலிருந்து பெறப்பட்ட அன்பு சிறப்பு உறவுகளை வளர்க்கிறது. மிகவும் திறம்படத் தொடர்பு கொள்ளக் குடும்பங்கள் கற்றுக்கொடுக்கின்றன. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, அன்பைப் பகிர்ந்து கொள்வது, திறந்த உரையாடல்களில் ஈடுபடுவது ஆகியவை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். குடும்ப உறவுகளுக்குள் சில சிக்கல்கள் ஏற்படுவது இயல்புதான். உரிமை உள்ள இடத்தில்தான் பிரச்சனை ஏற்படும். அதைச் சீர் தூக்கிப் பார்த்து அந்தப் பிரச்சனையை முடித்து வைப்பது ஒரு குடும்பத்தில் உள்ள சக உறுப்பினர்கள் தான். எனவே அனைத்து உறவுகளையும் கொண்டாடுவோம்..;