க.பால்ச்சாமி திட்ட மேலாளா், தானம் சுகம் அறக்கட்டளை;
தேசத்தின் இன்றைய மிகப்பெரிய சமூக அவலம் என்பது குடி. இந்தியாவில் மதுவால் ஆண்டுக்கு 2.60 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கிறார்கள், இவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதுபால் பாதிப்பட்டு இந்த விபத்துக்களைச் சந்திக்கிறார்கள். மதுவால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். மது அதிகம்குடிப்பதால், ஏற்படக்கூடிய பாதிப்புகளில் முக்கியமானது கல்லீரல் பாதிப்பாகும். இந்தக் கல்லீரல் பாதிப்பால் மட்டும் ஆண்டுதோறும் இந்தியாவில் 1.4 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வளவு தெரிந்தும் நாம் மதுவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.;