ஒரு எலுமிச்சம் பழம் 26 ஆயிரம் ரூபாய்

ஒரு எலுமிச்சம் பழம் 26 ஆயிரம் ரூபாய்

ஆசிரியர். திரு. ப. திருமலை நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகம்;

வெயில் சூட்டைத் தணிக்க நான் மோர், எலுமிச்சம்சாறு போன்றவற்றை தொடர்ந்து குடித்து வர்றேன் நைநா.. எலுமிச்சம் பழம் என்று சொன்ன உடனேதான் ஞாபகம் வருது. ஒன்பது எலுமிச்சம் பழங்களை 2.36 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாங்க தெரியுமா? அதுவும் தமிழ்நாட்டிலே.. என்ன நைநா ஆச்சரியமாக இருக்கிறது..? எங்க நடந்தது..? விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா, ஒட்டனந்தல் அருள்மிகு ரத்தினவேல் முருகன் திருக்கோயில் பங்குனி உத்திரத்திருவிழாவையொட்டி, கருவறை வேலில் வைத்து வழிபட்ட 9 எலுமிச்சம் பழங்கள் ரூ.2.36 லட்சத்துக்கு ஏலம் போயினவாம். பேப்பரில் படித்தேன். சராசரியாக ஒரு எலுமிச்சம்பழம் 26 ஆயிரம் ரூபாய் ஆகுது. ஏலம்னு சொன்ன உடன் இன்னொன்று ஞாபகத்துக்கு வருது. ஒரு சாதாரண மரக் கதவு 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாமே.. ;

Read More ...

Related Post