கலைமாமணி, பேராசிாியா், முனைவா் கு.ஞானசம்பந்தன் ;
பெண்கள் தினமும் உணவில், 28 கிராமும், ஆண்கள் 38 கிராமும் நார்ச்சத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு. மனித உடலில் குறிப்பாகக் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் நிறைய வாழ்கின்றன. இவை நார்ச்சத்துக்களை உட்கொண்டு சிலவித நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை நார்ச்சத்து கிடைப்பதற்கு முழுத் தானியங்கள், பீன்ஸ், நிறையக் காய்கறிகள் உட்கொள்ளப் பரிந்துரைக்கிறது. மைதா ரொட்டிக்குப் பதில் முழுக் கோதுமையில் செய்த ரொட்டி, வெள்ளை அரிசிக்கு மாற்றாகப் பழுப்பு அரிசி, அசைவ உணவுகளுக்குப் பதில் கடலை, பட்டாணி, கொண்டைக் கடலை, பழச்சாறுகளுக்குப் பதில் பழங்கள் ஆகியவற்றை உண்பது பயன்தரும் என்கிறது.. ;