முனைவர் ஜி. ஆனி ஜோஸ்பின் மாநில மதிப்பீட்டு நிபுணர் குழு உறுப்பினர் இந்திய அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகம்;
பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதில்லை; பிளாஸ்டிக் பைகளில் காற்றுப் புகுவதில்லை; பிளாஸ்டிக் டப்பாக்கள் துருப்பிடிப்பதில்லை; அவற்றில் தண்ணீர் உட்புகுவதில்லை போன்ற குணாதிசயங்கள் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை வேகமாக வளர்த்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, பிளாஸ்டிக் பொருட்கள் மிகவும் விலைகுறைவாக இருந்தமையால், ஏழை மக்களின் செல்வாக்கைப் பெற்றன. இப்படிப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட பிளாஸ்டிக் ஒர் அற்புதமான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தச்சிறப்பான அம்சங்களே அவற்றின் தீமைகளுக்கும் காரணமாகி விட்டன.;