பேராசிரியர் முனைவர் வே. அழகப்பன், பதிவாளர் (பணிநிறைவு) மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ;
பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை அடிப்படை மனித உரிமைகள் என்பதை சர்வதேசச் சமூகத்திற்குத் தெரிவிக்க, மே 3ஆம் தேதி உலகப் பத்திரிகை சுதந்திர தினமாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. பத்திரிகைச் சுதந்திரம் என்ற வார்த்தை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுளள பேச்சுச் சுதந்திரத்தைப் பத்திரிகைச் சுதந்திரத்தின் கூறாகக் கருதலாம் ;