முனைவா் ஆா்.ராதிகா தேவி இயக்குநா், பெண்ணியத்துறை, மதுரை காமராசா் பல்கலைக்கழகம்;
நல்ல அரசியல் தலைவர்களாக இருப்பதற்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்பதே பெரும்பாலானோரது கருத்து. இந்தியப் பெண்கள் இதுவரை மாநில முதலமைச்சர்களாகவும், இந்திய அமைச்சர்களாகவும், பிரதமராகவும் இருந்துள்ளனர். இதில் "ஆண்களை விட பெண்கள்தான் சிறந்த அரசியல் தலைவராக ஆகிறார்கள்" என பத்தில் ஒரு இந்தியர் நினைக்கிறார் என்று தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெண்களின் வாக்குப்பதிவு மற்றும் பிரதிநிதித்துவம் குறைந்து காணப்படுகிறது. ;