ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை;
என்ன வியர்க்க விறுவிறுக்க வருகிறாய்.. ஒரே டிராபிக் நைநா.. சென்னை தான் இந்தியாவிலேயே நெரிச்சலான நகரமாக இருக்கும் போலிருக்கு அப்படியெல்லாம் இல்லை. டச்சு இட தொழில்நுட்ப நிபுணரான டாம்டாம் வெளியிட்ட போக்குவரத்து குறியீட்டின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரமாக கொல்கத்தா உருவெடுத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு பெங்களூரு இருந்தது. கொல்கத்தாவுக்கு அடுத்து பெங்களூரு, புனே, ஹைதராபாத் நகர்கள் உள்ளன. சென்னைக்கு ஐந்தாவது இடம். மும்பை நமக்கு அடுத்த இடத்தில் உள்ளது. டூவீலரில் வருவதால் தூசியில முகமெல்லாம் அழுக்காகி சுருங்கிப் போச்சு.. இப்ப வெயில் வேற.. இதுக்குத்தான் தண்டுலோதகம் இருக்கே.. தண்டுலோதகமா..? அப்படின்னா..?;