வழக்கறிஞர் சி.சே. இராசன், தலைவர், சமம் குடிமக்கள் இயக்கம்;
சமூக நீதி (Social Justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவைக் குறிக்கிறது. சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமான உரிமைகள், வாய்ப்புகள், அணுகல், செல்வம், ஆரோக்கியம், நல்வாழ்வு ஆகியவற்றை வழங்குவதற்கான ஒரு கருத்தாக்கம். சமூக நீதி” என்ற சொற்றொடர் 1780ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழிற்புரட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்கச் சட்ட அறிஞர்கள் இந்த வார்த்தையைப் பொருளாதாரத்தில் பயன்படுத்தினர். இன்று அதன் பயன்பாடு, பல்வேறு தளங்களில் உலகளாவிய ரீதியில் விரிவடைந்துள்ளது.;