கவிஞர் மு. முருகேசன் ;
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் நூல். ஒவ்வொரு குறளையும் கதை வடிவில் காணலாம். விவாதிக்கலாம். "ஒரு வழியாக கொட்டித் தீர்த்த மழை நின்னுடுச்சு.. தப்பித்தோம்.." என சதாசிவம் இராமசாமியிடம் சொல்ல, "மாரி வறப்பின், தருவாரும் இல்லை; அதனைச் சிறப்பின், தணிப்பாரும் இல்" என்கிறது நாலடியார் (104). இதன் பொருள், "மழை பெய்யாவிட்டால் பெய்ய வைப்பவர் யாரும் இல்லை. மிகுதியாக மழை பொழியும்போது அதனைத் தடுப்பாரும் இல்லை" என்பதாகும். அப்படியென்றால் வள்ளுவர் ஏன் வான்சிறப்பு எனப் பாடவேண்டும்? ;